இணையில்லாத தமிழ்ப்பெருமாட்டி இராதா தியாகராசன்
———————————————————————————————–
கலையன்னை டாக்டர் திருமதி இராதா தியாகராசன் கேரள மாநிலத்திலிருந்து மதுரை வந்து கருமுத்து குடும்பத்தோடு கலந்து செந்தமிழ்க்கல்வியைச் செழுமையுற வளர்த்துக் கொண்டவர்.
உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களிடம் மாணவ நிலையிலிருந்து கல்வித்திலகமாக மலர்ந்து உரைவேந்தரின் நற்றினை உரைக்கே அணிந்துரை எழுதியவர்.
திருவாசகத்தில் வாழ்நாளெல்லாம் திளைத்து மகிழ்ந்து ஆங்கிலத்தில் ஆய்வுக்கட்டுரை எழுதி முனைவர் பட்டம் பெற்றவர்.சங்கக்கல்விக்
கற்றவர் எப்படி பேசுவார் என்று ஒருவரை சுட்டிக்காட்டுவெதன்றால் அன்னை இராதா தியாகராசனைத் சொல்ல முடியும்.
கலைத்தந்தை கருமுத்து தியாகராசர்க்குக்குறிஞ்சிப்பாட்டு முழுவதும் மனனமாக சொல்லும் தகுதியிருந்தது என்று உரைவேந்தர் குறிப்பிட்டுயிருக்கிறார்
அழகப்பர் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக தமிழகத்தில் இவரை அமர்த்திய பெருமை புரட்சித் தலைவரை சாரும்.
பழுத்த வயதில் அந்த கலைமலர் உதிர்ந்து விட்டது.கருமுத்து கண்ணன் அந்தப்புகழ் மரபை பட்டொளி வீசி பறக்கச் செய்யும் பெருமை பாராட்டுக்குரியதாகும்.

Add a Comment