பொய் நம்பிக்கை
பாம்பு பால் குடிக்கும் என்பது பாமரனின் நம்பிக்கை.படிப்பறியாதவன்,பழகாதவன் பா வுக்கு மோனை வரவேண்டும் என்று இப்படி சொல்லியிருக்கிறான்.நல்ல வேளை பாதாம் கீர் என்று சொல்லவில்லை!
எளிய மக்கள் புற்றுக்கு பால் ஊற்றுகிறார்கள், அது மண்ணால் உறிஞ்சப்படும்.இது போக பாம்பு வாயைத்திறந்தாலும் பால் ஊற்ற முடியாது.
பொதுவாக பாம்புகள் வேட்கையினால் நீர் பருகும்.பாம்புகளை நாக பஞ்சமி விழாவின் போது பட்டினி கிடைக்கச் செய்து பால்,சர்க்கரைப்பொங்கல்,நெய்,தயிர் இவற்றைப்படைத்து அவற்றை வாய் வைப்பதால் நோய் பிடித்து பாம்புகள் சாகின்றன.நாக பஞ்சமி விழாவின் போது 50,000 பாம்புகள் சாகின்றன என்று திருமதி மேனகா காந்தி கண்கலங்க எழுதியிருக்கிறார்.
வாடிய பயிரைக்கண்டு வள்ளலார் வாடினார்.பாம்புகள் சாகின்றனவே என்று மேனகா மனம் வருந்துகிறார்.
பாம்பு பால் குடிப்பது,தொடர்வண்டியில் பயணம் செய்வது,நினைவாற்றல் மிகுந்து ஊர் விட்டு ஊரைத் தேடி ஆளைத் தேடி கண்டுபிடிப்பது என்பதெல்லாம் தேவர் படத்தில் தான் வரும்.
கதைகளையும்,கனவுகளையும் எப்பிடியோ நம்புகிற பழக்கம் வந்து விட்டது….

Add a Comment