POST: 2014-12-18T08:24:36+05:30

நமது முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ள பழக்க வழக்கங்கள், பண்பாட்டுச் சின்னங்கள், வழக்க நிலைகள், கலைகள், தத்துவ நெறிகள் நம்மைச் சுற்றி இருப்பினும் அவற்றைக் கண்டுகொள்ளாது நாம் பொருள்வளத்தையே சுற்றிச் செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றோம். பண்பாடு அறியாதவர்களின் நாடு பாழ்பட்ட நாடாகும்.

ஜப்பானியர் இரண்டாம் உலகப் போரில் அடைந்த துயரமே அவர்களின் பண்பாட்டை அறிவதற்கு வித்திட்டது.
பல ஆண்டுகள் பிறருடன் தொடர்பு அற்று தங்களை, தங்கள் நாட்டைப் பற்றி தங்களின் பண்பாட்டைப் பற்றி தங்களின் அரசியல் நெறிகளைப் பற்றி, அறிய முற்பட்டு, அவற்றை அறிந்து இன்று வியத்தகு முறையில் உயர்ந்துள்ளனர். பண்பாடு மிக்க பாரம்பரிய மன்னராட்சியில் இன்றும் மரபு மாறாத மாட்சிமை பெற்று விளங்குகின்றனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *