சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கோட்பாடுகளும் விதிகளும் பயிலரங்கம் 2009
டாக்டர் ஔவை நடராசனார் -5
அந்நிரை முதல்நாள்
அறம் பொருள் இன்பம் என்னும் மும்முதற் பொருட்டு
எதை எழுதினாலும் அறம் இருக்க வேண்டும். அறம் எதற்கென்றால் மக்களுக்கென்று இருக்க வேண்டும். மக்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது இல்லத்தில் அமையும். வீடு பிறகு நாடு. இந்த வீடும் நாடும் வேராகக் கொண்டிருப்பது அறம். இதுதான் இலக்கியத்தின் நுணுக்கம் என்று தொல்காப்பியம் சொல்கின்ற கோட்பாடு இன்றுவரை மாறியதா?
நேற்று வந்த திரைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள், நான் உங்களுக்காக ‘உளியின் ஓசை’யை எடுத்துக்காட்டப் போவதில்லை. எந்தத் திரைப்படம் ஆகட்டும். எல்லாவற்றையும் மறந்துவிட்டு Titanic (‘டைட்டானிக்’) படத்தை எடுத்துப்பாருங்கள். அதில் அறம் உண்டு. பொருள் உண்டு, இன்பம் உண்டு. இதைப் பார்க்கிற பொழுதுதான் விதிகள் தொல்காப்பியத்தில் எப்படி வகுக்கிறார் என்பது ஒரு நல்ல குறிப்பு.
நம்முடைய தமிழக முதலமைச்சரிடத்தில் நான் பல்லாண்டுகள் பணியாற்றியவன். அப்போது, நான் ஒரு முறை எழுதியிருந்தேன். இந்த வகையில் இவரைக் கருதுவதற்கு, விதியில் இடமில்லை என்று எழுதினேன். (இதனை நான் ஆங்கிலத்தில் எழுதினேன்). அவர் எழுதினார் விதியை மதியால் வெல்லாம். இதனைப் புறநடையாகக் கொள்க. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நாமே இலக்கணத்தில் புறநடை சூத்திரத்தைப் படிப்பதில்லை. வகுப்பில் சொல்லிக்கொடுப்பார்கள், 1000 பொதுவிதிகள் இருந்தாலும், ஒரு சிறப்பு விதி வந்தால் அத்தனை விதிகளும் அடிபடும். எனவே, இலக்கணத்திற்குச் சிறப்பு என்னவென்றால், எவ்வளவு தூரம் வலியுறுத்துகிறதோ, அவ்வளவு தூரம் தளர்வுக்கும் இடம்தருவது. அறிஞர் திருவாசகம் அவர்கள், வணிகத்துறையில் மாபெரும் வல்லுநர்.
நாங்கள் என்ன சொன்னோம். மக்கள், விலங்குகள் என்று பிரித்துவிட்டோம். மக்களுக்கும், விலங்குகளுக்கும் என்ன வேறுபாடு என்று பார்த்தால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பிறகுங்கூட, யானை காட்டில்தான் இருக்கிறது. அது ஒன்றும் நாட்டிற்கு வருவதில்லை. சிங்கங்கள் காட்டில்தான் முழுங்குகின்றன. ஆனால் காடுகளில் மக்களும் ஒரு நாள் வாழ்ந்தார்கள். அவர்கள் காட்டை விட்டு நாட்டுக்கு வந்தார்கள். நாட்டுக்கு வந்தபிறகு நகரத்திற்கு வந்தார்கள். நகரத்திற்கு வந்தபிறகு நாகரிகம் கற்றுக் கொண்டார்கள். நாகரிகம் கற்றதோடு மட்டுமில்லாமல் அறிவால் நாளும்நாளும் உயர்ந்து வருகிறார்கள். இவர்கள் நாளும்நாளும் உயர்கிறவர்கள், யார் மக்கள். விலங்குகள் இருக்குமே, தவிர மாறாது. இதனால்தான், உயர்திணை இன்னொன்று அல்திணை.
பேராசிரியர் இராமசாமி சொல்லுவார், அது ஒரு பெரிய சிக்கல். உயர்திணை என்பதை உயர்ந்த திணை. இது பண்புத்தொகை என்று எழுதியிருக்கிறார் பலபேர். ஆனால் உரையாசிரியர்கள் சொல்கிறார்கள் பாருங்கள். உயர்ந்ததிணை, நேற்றைக்கு இருந்ததைவிட இன்றைக்கு உயர்வானது. நாளைக்கு மேலும் உயர்வார்கள். உயர்ந்துகொண்டே இருக்கிற மக்கள், ஒழுகலாறு இருக்கிறதே, We ever growing, ever lost imprograss seedless enterer இதுதான் மனித இனத்தின் மாட்சி என்று இப்போது சொல்கிறார்களே, தொல்காப்பியம் உயர்திணை, அஃறிணை இதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது.
தொல்காப்பியத்தில் மொத்த நூற்பாக்கள் 1600 நூற்பாக்கள். 10 அல்லது 15 கூடும். அதிலே 250 இடங்களுக்குமேல் ‘நான் சொல்லவில்லை’ ‘என்று சொல்லப்படுகிறது’, ‘என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்’, இப்படிச் சொல்லிக்கொண்டே வருகிறவர், சில இடங்களில் தான் மட்டும் சொல்லுவார். எங்கே சொல்கிறார் என்றால், நாங்கள் எந்தச் சொற்கள் வருவதையும் தடுப்பதில்லை. வருகிற சொற்களை நீங்கள் எடுத்து எழுதும்போது உங்கள் ஒலிக்கேற்ப அல்லது அந்த ஒலிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள்.
நான் 5 வயது இருக்கும்போதே எனக்கு எகிப்து என்றதான் சொல்லிக்கொடுத்தார்கள். Egypt என்று சொல்லிக்கொடுத்தார்களா? எனக்குத் தெரிந்த வரையில் நான் சீனா என்று தான் செல்லிக்கொண்டிருந்தேன். இங்குப் பிரெஞ்சு நாட்டில் இப்போதும் சைனா என்று தான் சொல்வார்கள். நான் இருந்தபோது எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது இயேசுநாதர் தான். காரணம் ‘ஜுஸஸ்’ என்ற ‘ஜகரம்’ உங்களுக்கு வராது. இதைச் சொல்லும்போது பாருங்கள், தொல்காப்பியர், ‘என்ப’ என்று சொல்லவில்லை. அவர் காலத்தில்தான் இந்த வடசொற்கள் அலைமோதின. அது வடசொற்கிளவிக்கு மட்டுமல்ல. ஆங்கிலத்திலும்.
துணைவேந்தர் கேட்டால் மகிழ்வார்கள். ஆங்கிலச் சொல்லைச்கூட, நாங்கள்,
‘சைக்கிளை எடுத்து வா’
இரண்டாம் வேற்றுமை உருபோடு சொல்கிறோம்.
‘காருக்குக் காற்றைப் பிடி’
நான்காம் வேற்றுமை உருபு. தமிழ்ச்சொற்களையும் நம்முடைய நாவுக்கேற்றபடி இலக்கணத்தில் உரைத்துக்கொள்ளுதற்கும் அது வடசொல் என்று சொன்னாலும், தொல்காப்பியர் அயற்சொற்கள் அத்தனையும் சேர்த்துக்கொண்டார்கள்.
இப்படி ஒரு தொல்காப்பியம் காலத்தினால் மாறாமல் கோலத்தினால் பெரிதும் சீர்குழையாமல் என்றும் விளங்குகின்ற சீரிளமைத் திறத்தை அறிஞர் பலரும் உங்களுக்குப் பேசி மகிழ்ந்திருக்கிறார்கள்.

Add a Comment