POST: 2014-12-12T08:09:58+05:30

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கோட்பாடுகளும் விதிகளும் பயிலரங்கம் 2009

டாக்டர் ஔவை நடராசனார் -4

தொல்காப்பியத்தினுடைய கோட்பாடுகள் என்று காணும் போது, உங்கள் துணைவேந்தர் பேசும்போது மிக உருக்கமான ஒரு கருத்தைச் சொன்னார். நம்முடைய தமிழக முதலமைச்சர் அவர்கள் 142 நூற்பாக்களை எடுத்து 100 தலைப்புகளில் எழுதியது தொல்காப்பியப் பூங்கா. அவர் தன் கைப்பட 600 நூற்பாக்களை எழுதியிருக்கிறார். அதிலே இருப்பதில் இந்த 142-த்தான் எடுத்து எழுதினார். அதில் என்ன சிறப்பென்றால் இலக்கியங்களிலே தேர்ச்சி உடையவர்களுக்கு இலக்கணம் இயல்பாகவே வரும் என்பதற்கு ஒரு சான்று.

அவர் தான் படித்த இலக்கியத்தை நினைக்கிறார். அவர் காதல் வாழ்க்கையைப் பற்றி எழுதியிருக்கிறார், பல கதைகளில். இப்போது நீங்கள் பார்த்திருக்கலாம். பாலிருக்கும், பழமிருக்கும் தூக்கம் வராது. தொல்காப்பியம் சொல்லுகிறதே, எப்படிப் பிரிவிலே நோதல், இரண்டுபேரும் கண்களால் கண்டார்கள், கண்கள் பேசின, காதல் பிறந்தது. இரண்டும் கண்ணால் நோக்குதலைப் பற்றித் தொல்காப்பியம்,
‘ஒன்றது பாலே தமியர் காண்ப’
இதில் ஒரு பெரிய கருத்து நீங்கள் எண்ணவேண்டியது, ஒரு பழைய கதை இருக்கிறது. அந்தக்கதை பொய்க்கதைதான். அந்தக்கதையில் ஒரு கருத்து ஒன்று தெரிகிறது.

திருவாசகம் போல, பாண்டிய நாட்டை ஆண்ட வேந்தர், தமிழறிஞர்களையெல்லாம் அழைத்து, எங்கே தொல்காப்பியத்தைக் கொண்டுவாருங்கள் என்று கேட்டார். என் நண்பர் சுந்தரம் போலிஸ் நாட்டில் வேலை பார்த்தவர். அங்கெல்லாம் போய் தமிழ் இலக்கணம் சொன்னவர். எனவே எழுத்ததிகாரத்தைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டார் திருவாசகத்திடம். அவரும் (சுந்தரம்) இதுதான் எனக்குப் பயிற்சி நான் கொடுத்துவிட்டேன் என்று சொன்னார். திருவாசகம் கேட்டார், இன்னும் தொல்காப்பியம் முடியவில்லை வேறு யாரைக் கேட்பது என்று சொன்னார். மைசூர் நடுவண் நிறுவனத்திற்கு எழுதுங்கள். அங்கே, பேராசிரியர் இராமசாமி இருக்கிறார். அவரைக் கேளுங்கள் என்றேன். அவர் சொல்லதிகாரத்திற்குக் கொண்டுவந்து கொடுப்பார். அவ்வளவுதான். திருவாசகம் சொன்னால் சொன்னபடி செய்கிறவர். நான், சொல்லி 20 நாளாயிற்று இது இரண்டுதான் வந்திருக்கிறதே. மூன்றாவது எங்கே என்றுகேட்டார். தமிழர்கள் வாழ்வு சிதைந்த காலம் அது. தமிழர்களுடைய காதல் வாழ்க்கையினுடைய வெளிப்பாடு கலங்கிப்போன காலம் அது. எழுத்ததிகாரத்திற்குத் தமிழ் என்று பெயரில்லை. சொல்லதிகாரத்திற்குத் தமிழ் என்று பெயரில்லை. தமிழ் என்று சொன்னால் பொருளதிகாரம் தான்.

உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும், ஒரு இலக்கண நூல் இருக்கிறது. ஒரு அறுபது பக்கம். தமிழ் நெறி விளக்கம் என்று பெயர். அப்ப தமிழென்றால் எது? திடீரென்று காண்பது,
கண்டவுடனே விளங்குவது,மயங்கிய பிறகு மணந்துகொள்வது,
மணந்தபிறகு குழந்தை பிறப்பது, பிறகு மறந்தேன் என்று சொல்வது, இப்படிப்பட்ட துஷ்யந்தன் கதையா? காதல்.
இது வேறு பொருளதிகாரம் என்று கேட்டுப்பார்த்தால், திருவாசகம் சொன்னார், நான் கேட்டவரையில் யாரும் கொண்டுவந்து கொடுக்கவில்லை. நான், போய் என்னுடைய தெய்வத்தைக் கேட்கிறேன் என்று கேட்டார். கேட்டாராம். உங்களுக்குத் தெரிந்திருக்குமே, இக்கதை. உடனே கடவுள் சொன்னாராம், திருவாசகம் யாரிடத்தும் ஒரு பொருள் கேட்டதில்லை. அவர் பொன்னையா கேட்டார்? பொருளையா கேட்டார்? வேந்தர்க்கு வந்த கவர்ச்சி, அறிவு பொருத்தது. பாண்டிய வேந்தர்க்கு வந்த கவர்ச்சி ஞானத்தின் பொருட்டன்றே,

Intellectual enter, this cannot be isolated by any of the scholars which such others how is interested the vice chancellor makes a fleck means. What kind of the greatness and what kind of the love of wisdom the king possess. என்று சொல்வது போல, அன்று இரவு 60 நூற்பாக்களை எழுதி ஒரு ஏடு கிடைத்ததாம். அதற்கு என்ன பெயர், இறையனார் களவியல், இறையனார் அகப்பொருள் அது கூட சரியானது இல்லை. காரணம் அதில் புறப்பொருள் இல்லை.

இதைவிட இன்னொரு சிறப்பைப் பாருங்கள். இதனை எழுதியவர் இறையனார். இதில் என்ப என்று உள்ளது. ‘என்ப’ என்றால் ‘எனக்கு முன்னோர்கள் சொன்னார்கள்’ என்று, அப்படியானால் கடவுள் முன்னோர்கள் யார்? தமிழர்கள். இது தெரியாமல், கடவுள் மொழியைப் படைத்தார் என்பது எவ்வளவு மடமை. கடவுளே மொழிக்கு மாணவராக இருந்தார் என்று சொல்லுகிற தமிழுக்கு எவ்வளவு அறிவுடைமை. அந்த இறையனார் களவியலில் வருகின்ற பாடல்கள் அதிலே வருகிற 60 நூற்பாக்களில் ஏறத்தாழ 20 நூற்பாக்கள் தொல்காப்பியமே.

பொருள் எதற்காக? சொற்களை வைத்துக் கட்டுவதற்காக. சொற்கள் எதற்காக? எழுத்துகள் எப்படிப் பிறக்கின்றன, இந்த எழுத்துகள் தனித்தோ, தொடர்ந்தோ, சொல்லாகி, தொடராகி, அந்தத் தொடர் பொருளுடையதாக வருகிறது. நீங்கள் ஒன்றும் இது வாழ்க்கையா? இலக்கியமா? என்று ஆராய வேண்டாம். தமிழ்நாட்டில் எப்படி நூல் எழுதலாம். அவர்கள் காண்கின்ற வாழ்க்கை எப்படியிருக்கும்? கிரேக்க நாட்டில் கேட்டால் ஏன் எழுதுகிறீர்கள்? அவன் சொல்கிறான், its structure. இந்த மக்களுக்கு நல்லக் கருத்துக்களைச் சொல்ல வேண்டும். பிறகு சிறிதுநாள் கழித்து, அரிஸ்டாட்டில் சொன்னார், Instruction with getting job excellence. அதைத்தான் பின்னாளில் entertaining என்று சொல்லிவிட்டார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *