POST: 2014-12-10T07:37:42+05:30

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கோட்பாடுகளும் விதிகளும் பயிலரங்கம் 2009

டாக்டர் ஔவை நடராசனார் -2

நண்பர்களே! என்னோடு உடன் படித்தவர்கள்தான், பேராசிரியர் இராம. சுந்தரம், பேராசிரியர் கோதண்டராமன் பேராசிரியர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு கிழக்கு வெளுப்பதற்கேற்ற வகையில் புதிய நூல் வழக்கு பெறவேண்டும் என்பதற்காக, அந்தப் பதிப்பகத்தினுடைய தலைவர் அமெரிக்க நாட்டில் பல்லாண்டுகள் இருந்த பொறியாளர் பத்ரி அவர்கள் இங்கே வந்திருக்கிறார்.

தொல்காப்பியக் கோட்பாடுகளைப் பற்றி ஒரு கருத்து சொல்ல வேண்டும். என்னைவிட இலக்கணம் மிக நன்றாகப் படித்தவர் இராம. சுந்தரம். அப்போதெல்லாம் இலக்கணம் என்றாலே மருந்து போலிருக்கும். எது தொல்காப்பியம்? நான் வருகிறபோது, தெய்வசுந்தரத்தினுடைய மாணவர் சுந்தரம் எனக்குத் தொலைபேசியில், துணைவேந்தர் அவர்கள் உரிய நேரத்தில் வந்துவிடுவார். எங்கே இருக்கிறீர்கள்? என்று கேட்டார். நான் அப்போது சொன்னேன், நான் வந்துட்டேன். நான் வந்துவிட்டேனா? வந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படித்தானே சொல்லியிருக்கவேண்டும். இல்லையென்றால் அவர் சொன்னபோது நான் புறப்படவில்லை. வருவேன் என்று சொல்லியிருக்கவேண்டும். நான் வருவேன், நான் வந்துகொண்டிருக்கிறேன், நான் வந்துவிட்டேன். ஆனால் அவர் சொன்னவுடனேயே நான் வந்துவிட்டேன்(வந்துட்டேன்) என்று சொன்னேன். சுந்தரம் உடனே சொன்னார், தொல்காப்பியத்தை நினைவூட்டுகிறீர்களே?

வாராக்காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொல்

விரைவுப் பொருளில் சொல்வார்கள், இதுதான் தொல்காப்பியம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *