POST: 2014-12-04T09:49:53+05:30

உலகச் செம்மொழிகளில் தலைசிறந்த மொழியாக விளங்கும் தமிழ் மொழி தனித்துவம் பெற்ற மொழியாகும். உலகின் எந்த மொழிக்கும் இலக்கியச்சங்கம் எனப்படும் புலவர் அவையம் இருந்ததாகச் சான்றுகள் இல்லாத காலத்திலேயே முச்சங்கங்கள் கண்டது தமிழ் மொழி. சங்கம் நிலவியதைப் பிற்கால இலக்கியங்கள் குறித்தாலும் அதனை உறுதி செய்வது கலிங்கத்தை ஆட்சிபுரிந்த காரவேலனின் கல்வெட்டாகும். பொது ஆண்டிற்கு முன் அசோக மாமன்னன் கால கட்டத்தில் “திரமிள சங்கம்” இருந்ததை இக்கல்வெட்டுக் குறிப்பிலிருந்து தமிழ் மொழியின் தொன்மையை நன்கு அறிய இயலும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *