POST: 2014-11-30T10:53:49+05:30

மொழிபெயர்ப்பு எளிதில் புரிய வேண்டும்

15.03.2009 அன்று பாரதி கலைக்கழகம், வானவில் பண்பாட்டு மையம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து இவ்வாண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெறவிருக்கும் திருவாளர்கள் ஔவை நடராசன், சுகி சிவம், அமரசிகாமணி ஆகிய மூவருக்கும் ஒரு பாராட்டு விழாவை நடத்தியது.

விழாவில் பாரட்டுரை வழங்கிய பேராசிரியர் வ.வே.சு ஐயர் அவர்களின் உரையிலிருந்து:

“ஔவை நடராஜன், சுகி சிவம் ஆகியோருக்கு அவர்களின் செய்பணிச் சிறப்பு மிக்க தந்தையாருடைய பெயர்களே (ஔவை சு. துரைசாமி, டி.என். சுகி. சுப்பிரமணியம்) “பட்டமாக அமைந்து இருப்பதைப் பார்க்கிறோம். வேறுயாரும் பெற முடியாத பட்டங்கள் இவை.
கலைமாமணி விருது என்பது அரசு அளிக்கும் அங்கீகாரம். அதாவது மக்களின் அங்கீகாரம். இவ்வாண்டு கலைமாமணி விருது பெற இருக்கும் அனைவரையும் பாரட்டுகிறோம். என்றாலும் இம்மூவரும் நம்மில் ஒருவராய் கடந்த 30 ஆண்டுக்காலமாகத் தொடர்பு உடையவர்கள். இவர்களைப் பற்றிய நமது கணிப்பும் அரசின் கணிப்பும் ஒன்றாக அமைந்ததைப் பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி.
ஔவை நடராஜன் திணை தமிழும் தமிழ் சார்ந்த இடமும், புலமையோடு புதுமையும் உண்டு. மூன்று ஔவையாரைக் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகின்றது. இவர் ஆங்கிலத்திலும் புலமை கொண்ட நான்காவது ஔவை.

பேசும்போது இவர் சொற்கள் கனிந்து முதிர்ந்து உதிர்ந்து விழும். ஒருபோதும் அதிர்ந்து விழாது.

ஔவை உரையிலிருந்து
:
தமிழில் மொழிபெயர்ப்பு கவனமாகச் செய்ய வேண்டும். ப்ராஜக்ட், ப்ளான், ஸ்கீம் என்று பல்வேறாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் திட்டம் என்ற ஒரு சொல் மூலமாகவே அவற்றைக் குறிப்பிடுவதில் தவறில்லை. எளிதில் புரிய வேண்டும்.

அமுத சுரபி இதழ், ஏப்ரல் 2009, கேட்டவர்: சுரபிநேசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *