செம்மொழி நிறுவனத்தின் துணைத்தலைவர் பதவி நீக்கம்
சென்னை,நவ.24-தினமலர் பக்கம் 7
செம்மொழி நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்த முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் நீக்கப்பட்டுள்ளார்.இவருக்கு பதில்,சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி,ஒய்வு பெற்ற,பிரகாஷ் நியமிக்கபட்டுள்ளார். இதற்கான உத்தரவை,மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பிறப்பித்து உள்ளது.செம்மொழி நிறுவனத்தின் துணைத்தலைவராக,மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் இருந்து வந்தார்.
தமிழ்ப்புலமையும்,தமிழ் அறிவும் கொண்ட ஒருவரை,இப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று,மார்ச் 20ம் தேதி,முன்னாள் துணைவேந்தர்,அவ்வை நடராசன் நியமிக்கப்பட்டார்.
துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட பின்னும்,அதற்குரிய அதிகாரங்களோ,வசதிகளோ,
அவ்வை நடராசனுக்கு வழங்கப்படவில்லை.இந்நிலையில் ஏழு மாதங்களே ஆன நிலையில்,அவ்வை நடராசன் துணைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவ்வை நடராசன் கூறியதாவது:
என்னை நீக்கியதற்கு,எந்த காரணமும் தெரியவில்லை.மத்திய அரசிடமிருந்து,என் நீக்கம் குறித்து அரசாணை வந்திருப்பதாக,செம்மொழி நிறுவன பதிவாளர் எனக்கு தெரிவித்தார்.துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து,மூன்று ஆண்டுகள் பதவியில் நீடிக்கலாம்.ஆனால்,பதவிக் காலம் முடிவதற்கு முன்,என்னை ஏன் நீக்கியுள்ளனர் என தெரியவில்லை,இவ்வாறு அவர் கூறினார்.
அவ்வை நடராசன் நீக்கப்பட்டது குறித்து செம்மொழி நிறுவன வட்டாரங்கள் கூறுகையில்,மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்,முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட
கவர்னர்கள்,குழுக்கள் ஆகியன மாற்றப்படுகின்றன.அதுபோல,காங்;அரசால் நியமிக்கப்பட்ட செம்மொழி நிறுவனத் துணைத்தலைவர் நீக்கப்பட்டுள்ளார் என்றனர்

Add a Comment