POST: 2014-09-24T09:32:26+05:30

தமிழ் மொழிக்குப் பெருமை நல்கும் நூல்களில் தொல்காப்பியம்,திருக்குறள் என்ற இரு நூல்கள்
தலைசிறந்தனவாகும்.தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூவகை நெறியில் தமிழருடைய
எண்ணமும் உணர்வும்,ஒழுக்கமும் வாழ்வும்,பண்பாடும் கலையும் மிளிரும்.இலக்கியப்பாங்கை உரைக்கின்றது.எழுத்தும்,சொல்லும் தமிழரிடையே நிலவிய அறமும்,பொருளும்,இன்பமுமாகிய சிந்தை சொல் செயல் ஆகிய கூறுகளைத் திருக்குறள் குறட்பாக்களால் உரைக்கின்றது.திருக்குறள் தொல்காப்பிய
விதிகளுக்குக் காலத்தாலும் கருத்தாலும் பொருளாலும் நடையாலும் பெரிதும் இயைந்து நிற்பதாகும்.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *