POST: 2014-09-22T08:36:24+05:30

திசை எட்டும் திருவள்ளுவர் சிலைகளைத் திருக்குறள் நெறியைக் கடல் கடந்த நாடுகளிலும் நிறுவி உலக மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஒருமை உணர்வை வளர்க்க வேண்டும் என்பது அண்ணல் செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் தனி
விருப்பமாகவும் உலகத்தமிழ்ச் சங்கத்தின் உயரிய நோக்கமாகவும்
அமைந்துள்ளது. அந்த வகையில் உலகின் திலகமாகத் திகழும் ஆஸ்திரேலிய நாட்டின் அழகு நகரமாகிய சிட்னி மாநகரில்,திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை நிறுவும்
விழாவை உலகத்தமிழ்ச் சங்கத்தின் 13ஆம் மாநாடாகவும் நடத்தி மகிழ வேண்டும் என்ற மனச்செம்மை ஆஸ்திரேலியத் தமிழர்களுக்கு உயிரோடு ஒன்றிய நல்லுணர்வாகும்.திருவள்ளுவர் திருவுருவச் சிலையைத் தமிழகத்தின் தென்குமரியில் வனப்புற வடித்துச் சிட்னி மாநகரின் திருக்கோயிலுக்கு ஏந்தி
வருவது வரலாற்றுப் பெருமிதம் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.இது
தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் தாங்கொணாப் புகழையும்
தருவதாகும்.தென்குமரியில் கிடைத்த திண்ணிய கற்பாறையில் இச்சிலை உருவாகி திருவள்ளுவர் நெடுந்தோற்றத்தைக் கண்ணைக் கவரும் வகையில் காட்டுகிறது.
தமிழ்க்கடல் ஔவை நடராசானர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *