நம் குற்றங்கள் எத்தனை எத்தனையோ!
அதன் சிகரம் இதுதான்
முத்துச்செல்வங்களை,
வாழ்வின் நீருற்றுகளை,
மழலை மலர்களை நாம் மறப்பது சரியோ!
இன்று வளரும் எலும்பினை,
இன்று செழிக்கும் செந்நீரை,
இன்று அரும்பும் அறிவை
இன்று பூத்த இம்மலரைக்
காப்பதென உறுதி கொள்க!
நாளையெனச் சொல்வதைக் கைவிடுக!
இதன் தேவை இன்றோ-
இக்கணப் பொழுதே!
– நோபல் பரிசு பெற்ற கேபிரியலோ மிஸ்ட்ரால்(1889-1975)

Add a Comment