டாக்டர் து மெய்கண்டான் எழுதிய வளரும் குழந்தையும் வயிற்றுப்போக்கும் (1989) என்ற நூலின் டாக்டர் தாரா நடராசன், குழந்தை நல மருத்துவ வல்லுநர்முன்னுரை:
நல்லறிவின் நன்கொடை
வளரும் குழந்தையும் வயிற்றுப்போக்கும் என்ற இச்சிறுநூல் மக்கள் மீதும் மழலையர் மீதும் தீராப்பரிவு கொண்ட
டாக்டர் து மெய்கண்டான் அவர்களின் மருத்துவ நல்லறிவின் நன்கொடையாக மிளிர்கிறது.
இளமை தொட்டே ஆர்வமும்,மருத்துவக்கலையில் பொற்பதக்கங்களும் பெற்றுச் சிறந்த டாக்டர் து மெய்கண்டான் குழந்தை நல மருத்துவம் பற்றித் தான் கற்ற
கல்வியறிவோடும்,ஆயிரக்கணக்கான இளஞ்சிறுவர்களுக்குச் சிகிச்சை வழங்கிய பயற்சித்தெளிவோடும் இந்நூலை மிகவும் ஈடுபாட்டோடு எழுதியுள்ளார்.
குழந்தைகளைக் குலையுயிரும் குற்றுயிருமாகக் கொடுமைக்கு ஆளாக்கும் வயிற்றுப்போக்கால் நேரும் நீரிழப்பு நிலையைத் தடுத்துக்காப்பது மிகவும் இன்றியமையாத கடமையாகும்.என்னுடைய முப்பதாண்டு காலக்குழந்தை நல
மருத்துவத்தில் இத்தடுப்பு முறை கற்பிப்பது மிகவும் தேவையென வற்புறுத்தி வந்திருக்கிறேன்.
பெண் சிறார்களின் நல்லாண்டாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டில் இந்நூலை டாக்டர் து மெய்கண்டான் எழுதியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. டாக்டர் மெய்கண்டான் அவர்கள் இத்தகைய மருத்துவ நூல்களைத் தொடர்ந்தெழுத வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

Add a Comment