POST: 2014-09-11T09:36:20+05:30

பேராசிரியர் க வெள்ளைவாரணன்(9.12.1961)
அண்ணாமலை பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர்

அன்புருவாகிய அண்ணல்
வணக்கம் பல.நலம்
திருவளர் செல்வன் ஔவை நடராசன்(எம்.ஏ) திருவளர் செல்வி
தாரா(எம்.பி.பிஎஸ்,டி.சி.எச்) திருமண அழைப்பிதழ் இன்று மாலை
கிடைக்கப்பெற்று மகிழ்ந்தேன்.

செந்தமிழ்க்கல்வியும் நற்பண்புகளும் வாய்க்கப்பெற்ற மணமக்கள்
இருவரும்,தந்தையும் தாயும் சுற்றத்தாரும் நண்பர்களும் மகிழ்ந்து போற்றும் வண்ணம்,மனைவாழ்க்கையினை மகிழ்வுடன் நிகழ்த்தி,எல்லாச்செல்வங்களும் நற்பேறுகளும் பெற்று நீடு வாழ்க எனத் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடல்புரியும் அம்பலவாணன் திருவடிகளை வாழ்த்தி வணங்குகின்றேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *