பன்மொழிப்புலமை பெறுவதா என்றால் வேங்கடராஜுலு ரெட்டியாருக்குப்பன்மொழிப்புலமை தானாக வந்தது.
வரலாற்றுத் துறையிலே புகுந்து புதுமைகளைக் கண்டறிய முடியும் என்பதற்கு டாக்டர் இராசமாணிக்கனார் வழிவகுத்துக்காட்டியிருக்கிறார்;
திருமுறைகளையெல்லாம் எப்படிப் புதிய நோக்கத்தில் அணுகமுடியும்என்பதற்குத் துரையரங்கனார் வழிகாட்டியிருக்கிறார்;
வடமொழியினுடைய ஈட்டுச்சொற்களுக்கு எல்லாம் ன்தமிழ்ச்சொற்களைத் தேன்போல் எப்படி மொழிபெயர்த்துக் காட்டுவது என்பதை புருஷோத்தம நாயுடு
எடுத்துக்காட்டியிருக்கிறார்;
வரலாற்றுத் துறையில் மாந்தவியல் வரைவு கருத்துக்களை, சிவராஜப்பிள்ளை சுட்டிக்காட்டியிருக்கிறார்;
அறநூல்களின் ஆட்சித்திறத்தை அனவரதவிநாயகம் பிள்ளை காட்டியிருக்கிறார்;
வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு ஏற்ப கருத்துப்புதுமைகளை எல்லாம் நாம் எப்படியாவது பாராட்டி மகிழவேண்டும். புதிய கருத்துக்களைப் பழைய வடிவத்திலேயே சொல்லிக்கொண்டு இருப்பதனால் பயனில்லை. ஏன் ஒப்பிட்டுக்கண்டு, மாற்றுக்கருத்துக்களையெல்லாம் சொல்லலாம் என்பதற்கு
வையாபுரியார் வழிகாட்டியிருக்கிறார்.
ஆய்வே வாழ்வு என்ற நிலையில், கல்விக்கடலாகத் திகழ்ந்தவர் அறிஞர் க.த.திருநாவுக்கரசு என்றால் மிகையாகாது.
மென்மையான சாயலோடு புகழ்பெற்ற இன்னாசி ஆகியோர் செய்த தமிழ்ப்பணி பாராட்டத்தக்கது.
பெரும் தகைமையாளர்கள் அறிஞர் பொற்கோ, திருக்குறள் திலகம் இ.சுந்தரமூர்த்தி, அகராதிச்சுரங்கம் வ. ஜெயதேவன், ஆய்வாளர் மு.
சண்முகம்பிள்ளை, திருக்குறள் சிந்தனையாளர் கு. மோகனராசு என்று நான் அடுக்கிப் பேசுவதென்றால் நெடியபொழுதாகும். இப்படி எண்ணிப்பாருங்கள். ஒரு பெரிய அகன்ற விரிந்த ஒரு தமிழ் உலகத்திற்கே சான்றாக விளங்குகின்ற விளக்குகளைக் கொண்ட பெருமை வாய்ந்தது தமிழ்த்துறை என்று நான் மகிழ்ச்சியோடு சொல்ல விரும்புகின்றேன். எவ்வளவு பெருமையாக இருக்கிறது.
எனவே, நண்பர்களே தமிழினுடைய பல்வறு கிளைகளை, அந்தக் கிளைகளில் படந்ததிருக்கின்ற அழகை எடுத்துக்காட்டுகின்ற பல்வேறு துறைபெருமக்களை நீங்கள் ஆராய்கின்ற நிலையில் நின்றிருக்கிறீர்கள்.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment