POST: 2014-08-18T07:56:17+05:30

தந்தை தவவலியாலும்
முந்தை சார்ந்த புலவர் தவவலியாலும்
இந்தநாள் வரை காலன்
என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சினன்
என்பது பாரதியாருடைய பாடல். அது சென்னைப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு எவ்வளவு பொருந்தும் பாருங்கள்.
முந்தையோருடைய தவவலியும்
மொழிசார்ந்த புலவர்களுடைய தமிழ்வலியும் சேர்ந்தால்
இந்தநாள் வரை காலன்
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சினன்
என்று நான் வாழ்ந்தேன் என்று சென்னைப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை எவ்வளவு பெருமிதமாக இருப்பதை நாம் எண்ணிப்பார்த்து மகிழலாம்.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *