எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் எதிர்காலத்தில் பேராசிரியர் அரசு வழியில் ஆயிரம் பேரும், பேராசிரியர் அரங்க இராமலிங்கத்தின் வழியில் மேடையில் முழங்குவதோடு தன்னுடைய பழமைக்கருத்துக்களையும் கூட மற்றவர்கள் கேட்டு மகிழ்கின்ற வகையில் எப்படிச்சொல்லிக்காட்ட முடியும் என்பதற்கு, இலக்கியத்தை எப்படித்துணையாக்க முடியும் என்று வழிகாட்டிய அரங்க இராமலிங்கம் அவர்களையும் நான் வாழ்த்துகிறேன். நீங்கள்
தொடங்கியதனால் தமிழ்த்துறையில் புதுமை மலரக்கண்டேன். நான் கண்ட வகையில் இத்தகைய புதுமைகளை, இத்தகைய மறுமலர்ச்சியை இத்தகைய மாற்றங்களைத் துணிந்து
இந்தப் பல்கலைக்கழத்தில் செய்ய முடியும் என்பதற்கு வழிகாட்டிய வகையில் பேராசிரியர்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அறிஞர் பாலு அவர்கள் இளையவராக இருந்தாலுங்கூட அடுத்தநிலையிலும் இதே வழியை நாம் தொடர்ந்து எப்படியாவது நாம் கடைபிடிக்க வேண்டும். சிலநேரங்களில் தொடர்ந்து கடைபிடிக்க முடியாமல் போனால் துறைகளினுடைய பெருமை குறைந்துவிடும்.இப்படியெல்லாம்
புகழ்வாய்ந்த பொற்சுடர்கள் பொழிவுரை நிகழ்த்திய ஒரு மரபு வாய்ந்த சென்னைப்பல்கலைக்கழகம்தான் மற்ற பல்கலைக்கழகத்திற்கும் வழிகாட்டியாக ஒளிர்கிறது.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment