நடைமுறை குடும்பத்தின் நடப்புக்களை விம்மிதமுற்று மகிழும்படி
எழுதிக்காட்டிய பெருமை வியட்னாம் வீடு சுந்தரம் அவர்களைச்சாரும்.அந்த மாபெரும் கலைஞரின் மணிவிழா வாழ்க்கையை,இளைஞர்கள் குழு மகபதி நாடகத்தை
சங்கேத மொழியிலேயே நடித்துக்காட்டியதை 6.8.2014யன்று கண்டு
மகிழ்ந்தேன்.
என் எழுத்துக்கு வாய்த்த பெருமை, நடித்துக்காட்டிய நடிகர்
திலகம் சிவாஜி கணேசன் அவர்களைச்சாரும் என்று உருக்கமுடன் சுந்தரம் அவர்கள் கூறினார்.
இங்கிலாந்து இளங்கோவடிகளான ஷேக்ஸ்பியரின் மாக்பெத்
சித்திரம் நம் சிந்தையை கவர்வதாகும்.தமிழ் நாட்டு இளைஞர்கள் தங்களின் நடிப்புத்திறனை பிறரால் எட்ட முடியாத உயரத்தை
தொட்டுக்காட்டினார்கள்.ஷேக்ஸ்பியர் இருந்திருந்தால் சங்கேதத்தில் தன் நாடகம் நடிப்பதைக்கண்டு நெகிழ்ந்திருப்பார்,அழகிய நடனங்களை கண்டு
மகிழ்ந்திருப்பார்.
ஒல்லியான சுந்தரத்தின் புகழ் ஓங்கிச்சிறப்படையுமாக!

Add a Comment