மாணவ நண்பர்களே! நீங்கள் தமிழ் கற்கும் போதே வேறு துறை புலமையையும் ஒன்றாக வளர்த்துக்கொண்டால் தான் நாம் தமிழை அதோடு, அந்தக்கருத்தோடு இழைத்துக்காட்டி, ஒரு புதுமையை, பெருமையை, நலத்தை, வளத்தை மொழிக்குக் காட்டமுடியும். அந்த வகையிலேதான் பேராசிரியர்களுள் மு.வ. அவர்கள் நாட்டு மக்களுடைய மனத்தைக் கவருகின்ற அளவுக்கு, தான் எழுதிய நெடுங்கதைகளால், சங்க இலக்கியத்தின் சாறுபிழிந்தது போலத்தானே காட்டினார். சங்க இலக்கிய ஆர்வம் பொதுவாக எப்படி வரும் என்று சொன்னால், நெஞ்சில் ஒரு முள் படித்தால், தானாக வரும்.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment