POST: 2014-08-10T07:51:48+05:30

இன்று நீங்கள் இலக்கியத்தைக் காணும்பொழுது மனவியல் படிக்கின்ற மாணவர்கள் இருக்கிறார்கள். அறிவியல் படிக்கின்ற மாணவர்கள் இருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பல்கிப் பெருகிவருகின்றன. இப்படிப் பெருகிவருகின்ற துறைகளில் பங்கு பெறுகின்ற மக்கள் அவர்கள் எப்படிச் சிலப்பதிகாரத்தை அணுகலாம், சிலப்பதிகாரத்தை அவர்கள் வழியாக நாம் எப்படி அணுகலாம் என்று இரண்டு மூன்று துறைகள் இணைந்து பார்க்கின்ற ஒத்துப்பார்க்கின்ற ஒரு ஒப்பியல் நோக்கத்தோடு புதுமைகள் கண்டறிகிற திறத்தை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும். ஆங்கில இலக்கியங்களுடைய வளர்ச்சியைக் காணுகிறபோது, நமக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. காரணம் ஆங்கில இலக்கியத்தில் இன்றும் கூட ஷேக்ஸ்பியருக்கு என்றே ஒரு துறை என்றும், வேர்ட்ஸ்வொர்த்துக்கென்றே ஒரு துறையென்றும், மில்டனுக்கென்றே ஒரு துறையென்றும் வைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான நூல்கள் வந்தபிறகும் கூட திறனாய்வு, திறனாய்வுக்குத் திறனாய்வு, திறனாய்வில் வராத தெளிவுபாடு என்றெல்லாம் எழுதுகிறார்கள்.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *