POST: 2014-08-05T09:34:10+05:30

இளைஞராக இருந்து, ஆசிரியர் சங்கத்துக்காகவே அல்லும் பகலும் உழைத்து, தான் கற்ற கல்வியும்,பெற்ற திறமும் ஒரு புறம் இருந்தாலும் மக்களிடையே பெறவேண்டிய மதிப்பும் சிறப்பும் எந்நாளும் மாசுபடலாகாது என்ற வகையில் நின்றவர்தான் இளைஞர் செல்வராசன். இப்படியெல்லாம் வேறுதுறைகளையும் பார்த்தால், தமிழ்த்துறைக்குத்தான் ஒரு பெரிய பங்கு இருந்திருக்கிறது.ஆனாலும் பாருங்கள்! ஒரு தமிழ்ப்பேராசிரியருக்கு ஒரு இடையூறு வருமானால் எஞ்சிய ஆசிரியர்கள் ஒன்றுபட்டுத் தமிழ்ப்பேராசிரியருக்கா இந்தத்தடை? என்று யாருமே கேட்கவில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் சிறப்பு. இந்தச் சிக்கல் எல்லாம் தமிழ்த்துறைக்குத்தான் வரும். காரணம் தமிழாசிரியர்கள்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளமுடியும். அவர்களுக்கு அரசியலும் ஒன்றுதான். இலக்கியமும் ஒன்றுதான். நாடகமும் ஒன்றுதான். வாழ்வியலும் ஒன்றுதான். எங்கே எதுநடந்தாலும், உடனே மனம் துடிப்பது தமிழ்ப்பேராசிரியருக்குத்தானே தவிர, தாவரவியல் பேராசிரியருக்கு அதைப்பற்றி ஒரு கவலையும் வராது. இதை உணர்ந்து கொள்ளுகின்ற பழக்கம் என்பது மெல்லமெல்ல வரவேண்டும்
தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *