கிரேக்க நாட்டினுடைய அரசனும் அரசியும் சென்னை மாநகருக்கு வந்து நாங்கள், சென்னை மாநகருக்கு ஏன் வந்தோம் என்று கேட்டால், சென்னைப்பல்கலைக்கழகத்துத் தத்துவத்துறைப் பேராசிரியரிடத்தில் நாங்கள் படிக்க வந்திருக்கிறோம் என்றார்கள்.
தத்துவத்துறை பேராசிரியராக இருந்த டி.எம்.பி. மகாதேவன் அவர்கள் அத்தகைய பெருமை பெற்றவர். டி.எம்.பி. மகாதேவன் அவர்களுடைய பெருமை எப்படியென்றால் இந்தியக் குடியரசுத் தலைவருக்காகப் பெயர்களைப் பரிந்துரைத்த நேரத்தில் டி.எம்.பி. மகாதேவன் பெயரும் ஒரு பெயராக இருந்தது.
இப்படியெல்லாம் புகழ்வாய்ந்த பொற்சுடர்கள் பொழிவுரை நிகழ்த்திய ஒரு மரபு வாய்ந்த சென்னைப்பல்கலைக்கழகம்தான் மற்ற பல்கலைக்கழகத்திற்கும் வழிகாட்டியாக ஒளிர்ந்தது.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment