பேராசிரியர், டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் அவர்கள் தாம் ஆற்றிய தலைமைப் பணியினால் சிறந்ததோடு, பணிவினாலேயே பெருமை பெற்றவர்.
என்றும் பணியுமாம் பெருமை என்பதற்குச்சான்று வேண்டுமென்றால் சி.பா.தான். அவர் தன்னுடைய பணிவினாலேயே தன்னுடைய அடக்கத்தினாலேயே தன்னுடைய புலமை வளத்தினாலேயே மிகப்பெருமிதமான ஒரு வாழ்க்கையை வாழ்வதைக்காட்டிலும் அடக்கமாகப் பலருக்கு அடங்கி வாழ்வது சிறப்பு என்ற கருத்துடையவராக இருந்தார். அடங்கி வாழலாம் என்கிற கருத்துடைய பேராசிரியர் பலருக்கு வழிகாட்டினார்.
-தமிழ்கடல் ஔவை நடராசனார்

Add a Comment