POST: 2014-07-26T21:07:48+05:30

பேராசிரியர் துரையரங்கனார் எல்லாத்துறையிலும் ஆர்வங்காட்டினாலும் கூட, இலக்கணத் துறையிலே தம்முடைய பெரும் புலமையை எடுத்துக்காட்டினார்.

நமக்குத் தெரிந்த வரையில் ‘காமம்’ என்ற சொல், விலக்கத்தக்க ஒரு சொல்லாக நினைப்பதோடு அதுவொரு குறைவுடைய சொல் என்றுதான் நினைத்தோம். அதுவொரு தமிழ்ச்சொல் என்று என்னால் நினைக்க முடியாமல்தான் நான் அப்போது இருந்தேன். ஆனால் காமம் என்பது, கமம் நிறைந்தியலும் என்கிற தொல்காப்பிய நூற்பாவை எடுத்துக்காட்டி மனநிறைவினால் பிறப்பதுதான் காமம். மனம் பொங்கித் ததும்புவதும் காமம் என்று சொல்லி, இந்தச் சொல்லை இழிவு என்று சொன்னால் காமகோடி பீடம் என்பதற்கு என்ன பொருள் என்று கேட்டார். பாருங்கள்! இப்படியெல்லாம் அந்தப் பேராசிரியர்கள் கமம் நிறைந்தியலும் அப்படித் தமிழ்ச்சொற்களை, அரசன் தமிழ்ச்சொல்லா? என்று எழுதியிருக்கிறார்.

பேராசிரியர் துரையரங்கனார் மிகத்துணிவாகத் தன்னுடைய கருத்தை எடுத்துப்பேசுவார். துணிவாக எடுத்துப்பேசுவது மட்டுமில்லாமல் இந்த இலக்கணங்களின் நுணுக்கங்களை எடுத்துக் காட்டுவதில் மிகவல்ல திறமையோடு அவர் திளைத்தார்.
– தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *