POST: 2014-07-25T07:17:49+05:30

பேராசிரியர் துரையரங்கனார் நெருங்கிப் பழகமாட்டார். அவர் நெருங்கிப் பழகவில்லையென்றாலுங்கூட எந்த நேரத்திலும் ஐயம் கேட்கவந்தால், “நீ இதுவரை என்ன படித்து இருக்கிறாய்?” என்று கேட்பார். ஐயம் கேட்கிறவருக்கே கொஞ்சம் மனம் அலுத்துப்போகும். ஆனாலும், தான் அந்த ஐயத்தைத் தீர்க்கவேண்டும் என்பதற்காக, ஒன்று சொல்லவிரும்புகிறேன். பல்கலைக்கழகப் பேராசியராக இருந்தபோதுங்கூட அவர் சிந்தாதிரிப்பேட்டையில், வேதாந்த சங்கத்தில் அந்திவேளையில் வகுப்பெடுக்க வருவார்.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *