POST: 2014-07-20T06:18:48+05:30

பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்களுடைய அறைக்கு அடுத்த அறையிலேதான் இந்திமொழியினுடைய பேராசிரியர் அறை இருந்தது. இந்தி மொழித்துறைப் பேராசிரியர் உங்களுக்கெல்லாம் தெரிந்தவர். நமக்கெல்லாம் மிக அன்புடையவராகப் பழகியவர். டாக்டர் சண்டராஜு நாயுடு அவர்கள். நாங்கள் அந்தப் பல்கலைக்கழகம் பக்கம் செல்லும்போதேல்லாம் அவர்(நாயுடு அவர்கள்), நீர் அருந்துவதற்காக, (ஒரு பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து வெட்டிவேர் எல்லாம் வெட்டி மணக்கச் செய்திருக்கிற நீர் சேதுப்பிள்ளை அறையில் இருக்கும்) சண்டராஜு நாயுடு அங்கே வந்து நிற்பார். அவர் அப்பொழுது தண்ணீர் குடித்தபோது, மாணவர்களைப் பார்த்துச் சொன்னார்,
“பாருங்கள்! இந்தி வளர்வதானால் தமிழ் தண்ணீர் ஊற்றினால்தான் வளரும்” என்று தெரிகிறதல்லவா?
தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *