POST: 2014-07-16T09:19:37+05:30

சென்னைப்பல்கலைக்கழத்தில் எனக்குத் தெரிந்து அறக்கட்டளைப் பொழிவுகளுக்கு ஆக்கம் தந்து திங்களுக்கோர் அறக்கட்டளைச் சொற்பொழிவை நடத்தியதோடு, நாட்டில் பேசப்படுகின்ற கருத்துக்கள் எல்லாவற்றையும் அந்தப் பொழிவுகளில் கேட்கலாம் என்று, அகலக்கதவுகளைத் திறந்த பெருமை டாக்டர் சஞ்சீவி அவர்களைத்தான் சாரும். இது முதலில் வியப்பாக இருக்கும். இல்லையென்றால் சிங்காரவேலரைப்பற்றிய சிந்தனை நமக்கு வந்திருக்காது; அயோத்திதாசர் என்ற அறிஞனைப் பற்றிய கருத்து தெரிந்திருக்காது. இன்னும் மாறி மாங்குடி மருதனாரும் மார்க்சியச் சிந்தனையும் என்று ஒரு தலைப்பிடலாமா? என்று என்னிடத்தில் கேட்டார்கள். எனவே அறிஞர் சஞ்சீவி அவர்களுக்கு இலக்கியப் புலமையோடு நாட்டு மக்களோடு தமிழியலில் நாம் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்பெற்ற பங்கு இருக்கிறதே அதுவொரு மிகப்பெரிய பங்காகும்.
தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *