POST: 2014-07-06T11:23:17+05:30

மாணவர்களை அமரவைத்துக் கற்றுக் கொடுப்பது என்பதைக் கல்லூரிகளிலே ஆசிரியர்கள் கற்றுத்தருவது போல, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கற்றுத்தர வேண்டா! என்ற கருத்து இருந்தது. அதனால் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வகுப்பு எடுக்கிற வாய்ப்பே இல்லை. ஆனால் பல ஆண்டுகள் கழிந்த பிறகுதான் முதுகலை படிக்கிற மாணவர்கள் இரண்டு கல்லூரிகளிலும் முதுகலை படிக்கிற வாய்ப்பு இருப்பதுபோல, ஏன் திங்களுக்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒருமுறை ஒரு வகுப்பினைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நடத்தலாம் என்ற கருத்தை,பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்கள் வகுப்புக்கு வந்து எடுத்து நான் பார்த்ததில்லை. ஆனால் பேராசிரியர் துரையரங்கனார், சேனாவரையம் வகுப்பு எடுப்பதற்காகப் பல்கலைக்கழக வகுப்புக்கு வந்து எடுத்தார். வந்த மாணவர்கள் முதுகலை மாணவர்கள் என்று ஒரு பத்துப் பேர்தான் வருவார்கள். -தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *