பணிக்கு என்று பணியைச் செய்வது,
பணத்துக்கு என்று பணியாற்றுவது,
படைப்புத் தொழிலோடு பணியாற்றுவது
என்று ஒரு மூன்று வகையாகப் பிரித்துச் சொல்லலாம். பேராசிரியர்கள் பலபேர் படைப்புத் தொழிலோடு பணியாற்றுவது என்பது அரிது.
படைப்புப் பண்பினாலேயே உயர்ந்து நின்று பேராசிரியராகத் திகழ்ந்த பெருமை மு.வ. அவர்களைத்தான் சாரும். அவர் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்னாலேயே அவருடைய படைப்புக்கள் நாட்டு மக்களின் நெஞ்சங்களையெல்லாம் ஒரு பெரிய மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியவை. ‘மணப்பரிசு’ என்று மற்றவர்களுக்கு வழங்குவது என்றால் மு.வ.வினுடைய நூல்களைத்தான் தேடிவழங்குவார்கள். அவருடைய பெருமிதம் படைப்புத் தொழிலோடு வந்தது.
ஆங்கில நாட்டிலும் சொல்கிறார்கள். பணிக்காகவே பணியைச் செய்வது என்பதனால், தான் எடுத்துக்கொண்ட பணியை ஆழமாகச் செய்து கொண்டிருப்பது என்றவகையில் சிலரும், இது ஒரு வாய்ப்பாகக் கிடைத்தது என்று இருந்தவர்களுக்கு நடுவில், மு.வ. என்னைப் பேராசிரியராக ஏன் அமர்த்துகிறீர்கள் என்று எண்ணிக்கொண்டு ஒரு வருத்தத்தோடு வந்தவர்.
தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment