POST: 2014-07-03T09:07:57+05:30

பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்களைத் தொடங்கிப் பார்த்தால் திருவாய்மொழி அவருக்கு நன்றாக வரும் என்று தெரிந்ததனால் பு.ரா. புருடோத்தம்ம நாயுடு அவர்களை அந்தத் தலைப்பிலே ஆய்வு செய்யச்சொன்னார். துரையரங்கனார் பணியாற்றியபோது அவரைத் திருமுறைகளைப் பற்றி ஆராயுங்கள் என்று தலைப்பு தந்ததும் சேதுப்பிள்ளைதான். என்னோடு படித்த மாணவர் என்று சொன்னால் நண்பர் அமீது என்பவர் படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் படித்து முடித்து வந்திருந்தார். அவருக்குக் கம்பராமாயணத் தலைப்பைத் தந்தார். குமரவேலனுக்குப் பரதன் என்ற தலைப்பை ‘நீ தொடங்கு!’ என்று சொல்லிக் கம்பராமாயணத் தலைப்புகளையெல்லாம் விரும்பித்தந்து அவரவர்கள் விரும்பும்படி ஆய்வுசெய்வதற்கு ஒரு பணி செய்தார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *