POST: 2014-06-28T20:25:52+05:30

சேதுப்பிள்ளை அவர்களுடைய சிறப்பு, அவர் அணிந்திருந்தது எப்போதும் ஒரு டையும் சட்டையும் தான். அவருடைய நாற்காலியின் பின்னாலே அந்தக் கோட்டு இருக்கும். துணைவேந்தரிடத்தில் நெருங்கிப்பேசிய தமிழ்ப்பேராசிரியர் என்று சொன்னால் சேதுப்பிள்ளை ஒருவர்தான். மு.வ. கூட “நான் அவரைப் பார்த்துப் பேசியதே ஒரு முறை இருமுறைதான்” என்று சொல்லுவார் துணைவேந்தர் ஏ.எல். முதலியாரை. எப்போதாவது கூப்பிட்டு விடுவாரோ என்பதற்காக எப்போதும் கோட்டை அணிந்தபடியே துரையரங்கனார், பலநேரம் வந்து உட்கார்ந்திருப்பார். எனவே, அப்போது துணைவேந்தர்களுக்கு ஏ.எல். முதலியார் அவர்களை மனதில் நினைத்தபடிதான் தமிழ்த்துறை ஓரத்தில் ஒதுங்கியிருந்தது. சேதுப்பிள்ளை சொல்லுவார், “வடபால் தடமுனை போந்தது எங்களிடம” என்று நகைச்சுவையாக. மு.வ. கூட, ஒருமுறை ஆய்வு மாணவராக அங்கே வந்திருந்து, பிறகு அவரை அங்கேயே பணியாற்றச் சொன்னபோது, “உப்புக்காற்று என் உடலுக்கு உதவாது” என்று சொல்லித் திரும்பி வந்துவிட்டவர் பச்சையப்பன் கல்லூரிக்கு. -தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *