சேதுப்பிள்ளை, மிகவும் இனிமையாகப்பேசுவார்கள். நான் பச்சையப்பன் கல்லூரியில் இருந்தபோது, நான் அவரை அழைத்து பேசவைத்தபோது,:
இன்று பொங்கல் விழா
பழம் பானைகள் எல்லாம் விடைபெறும்
புதிய பானைகளில் பொங்கல் நடைபெறும்
என்று சொன்னார்.
அவர் பேசுகிற பொழுதே, இலங்கை என்னும் அந்த கலங்கு மாநகரில், இலங்கை வேந்தன் கண்களில் கொண்ட கனலால், சீதை அழுத கண்ணீர் புனலால் என்று அவர் எடுத்துப்பேசுகின்ற தமிழினடைய இனிமை நம்மைப் பெரிதும் ஈர்க்கவல்லது. அது அடுக்குத் தமிழ் என்று நாம் சொல்வதற்கில்லை. அதுவொரு அழகுதமிழ். மோனை அழகு முழுதும் கலந்த வகையில் தமிழின் பெருமையைச் சொல்வதாகும்…. தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment