POST: 2014-06-22T10:11:24+05:30

சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முதன்முதலில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதாமல் அறிவினுடைய பெருமிதத்தால் டி.லிட்., என்ற பெருமிதப் பட்டம் பெற்றவர் அறிஞர் சேதுப்பிள்ளைதான். அது ஒரு பெரிய சிறப்பு. துணைவேந்தர் திரு. ஏ.எல். முதலியார் அவர்கள் ‘எனக்குத் தமிழைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் தமிழை இந்தப் பல்கலைக்கழகத்திற்குத் தெரியவைத்த பெருமை சேதுப்பிள்ளையைத்தான் சாரும்| என்று அப்போது சொல்லி அவருக்கு அந்தப் பட்டப்பேற்றினை வழங்கினார்கள். அது ஒரு பெருமிதமான பட்டம் வழங்கிய விழா. அந்த விழாவின்போது, சேதுப்பிள்ளை அவர்கள் பேசவில்லை.–
:தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *