வாழ்க்கை என்பது ஒரு பெரிய வாய்ப்பாகக் கிடைத்த செல்வமாகும். வாழப்பிறந்த ஒவ்வொருவருக்கும் சில உடைமைகள் வேண்டும். உடைமைகள் இருந்தால்தான் ஒருவனை உடையவர் என்று சொல்லவேண்டும். இறைவனுக்கு உடையவன் என்றே ஒரு பெயருண்டு. அது என்ன உடைமைகள் ? என்றால் பத்துக் குறட்பாக்களை எழுதிய திருவள்ளுவர் பத்து உடைமைகளை பத்து அதிகாரங்களாக வழங்கியிருக்கிறார்
. 1. அன்புடைமை
2. அடக்கமுடைமை
3. ஒழுக்கம் உடைமை
4. பொறை உடைமை
5. அருளுடைமை
6. அறிவுடைமை
7. ஊக்கமுடைமை
8. ஆள்வினை உடைமை
9. பண்புடைமை
10. நாணுடைமை
இந்தப் பத்து உடைமைகளும் பத்து உயர்ந்த பண்புகளைக் காட்டும். உடையர் எனப்படுவது ஊக்கம் என்றபடி இந்த பத்துப் பண்புகளையும் மானிட வாழ்க்கையின் உயிர்ப் பண்புகளாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

Add a Comment