POST: 2014-06-08T13:09:14+05:30

பேராசிரியர் கல்கியின் ஒப்பற்ற தமிழ்க்காவியமான பொன்னியின் செல்வனுக்கு ஓவியவொளியூட்டியவர் மணியன் அவர்கள் ஆவார்கள்,அந்தக்காவிய ஓவியத்திற்கு ஒலியையும் ,ஒளியையும் ஊட்டி நாடகக்காப்பியமாகவே நம் கண்முன் நிறுத்திய பெருமை அற்புத விளக்கு,அதிசய விளக்கு,வியப்பு விளக்கு என்றெல்லாம் பெயரைக்கொண்ட Magic Lantern நாடகக்குழுவினரின் முன்காண் நிகழ்வில் நேற்று மாலை நான் பங்கு கொண்டேன்.உலகம் முழுவதும் இந்த நாடகம் வலம் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.பளுவேட்டரின் பழுத்த நடிப்பும்அருள்மொழியின் அழகுத்தோற்றமும்,வானவராயர் வந்தியத்தேவனின் மிடுக்கும்,வானதியின் துடுக்குப் பேச்சும்,வாளைச்சுழற்றும் வல்லமையும் அனைவரையும் கவர்ந்தன.திரு கல்கி ராஜேந்திரன், திருமதி சீதா இரவியும் முன்வரிசையில் அமர்ந்து பெருமை சேர்த்தனர்.முதன்முறையாக தமிழ் பேசத்தெரிந்தவர்களும்,ஏறத்தாழ உயரம் குறைந்த கிரேக்கவீரர்களைப் போல படைவீரர்கள் நடித்ததும்,ஓங்கி உயர்ந்த யானை மேடையில் நடந்து போரில் பங்குகொண்டது உன்னதமான காட்சியாகும்.வரலாற்றுப்பெருமையை வளர்த்து தமிழ் இலக்கியத்திற்கு ஈடல்லாத பெருமை சேர்த்த டாக்டர் மா இராசமாணிக்கனாரின் பெயரன் குமணனின் முகப்புரை நாடகத்திற்கு பொலிவூட்டியது.புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்,கலைஞானி கமல்ஹாசன் திரைப்படமாக எடுக்க முடியாததை மேடை நாடகமாக அரங்கேற்றிய பெருமை தமிழர்களின் நெஞ்சத்தை குளிர்விப்பதாகும்.சோழர் காலத்தமிழ் சூளைமேட்டுத் தமிழ் போல ஒலித்ததே என்ற ஏக்கம் ஒருபுறத்தில் சிராய்த்தது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *