தமிழகத்தின் தன்னேரில்லாத பேரறிஞர் மூதறிஞர் டாக்டர் ச.வே.சுப்பிரமணியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக இருந்து நூற்றுக்கணக்கான அரிய நூல்களைப் பதிப்பித்து ஏறத்தாழ ஐநூறு நூல்களுக்கு மேல் வெளியிட்டதோடு மாபெரும் தமிழ்ப்பணி ஆற்றும் வகையில் குற்றாலத்துக்கு அருகில் தமிழூர் என்ற வளாகத்தில் தமிழ் தவம் செய்யும் பொதிகை முனிவரைப் போல புகழோடு விளங்குகிறார். அவர் பெறாத பரிசுகள் இல்லை. அவரைப் பாராட்டாதவர்கள் தமிழர்களே இல்லை. சலியாமல் உழைக்க வேண்டும் என்றால் சான்றோர் ச.வே.சுவை சான்றாகக் கொள்ளவேண்டும் என்று பல மேடைகளில் என் தந்தையார் சொல்லியிருக்கிறார்கள்.

Add a Comment