தென்காசியைத் தலைநகராகக் கொண்டு பராக்கிரம பாண்டியன் ஆண்டிருக்கிறான். சிற்பச் செல்வம் நிறைந்த இந்த சிவன் கோயிலை நிறுவினான். கோபுரத்தைப் பெரிதாகக் கட்டினான். அதுமட்டுமில்லாமல் இந்தக் கோயிலை – கோபுரத்தை நன்றாகப் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு பாடலையும் எழுதி கல்லில் வெட்டி வைத்தான். இந்தக் கோயிலைக் காப்பது பெருமக்களின் கடமை என்று நெடுஞ்சாண்கிடையாக தன்னுடைய படிவத்தைச் செய்திருக்கிறான். அவன் கருதியது வீணாகவில்லை என்பதற்கேற்ப தினத்தந்தி அதிபர் செம்மனத்துச் செம்மல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் இந்தக் கோயில் கோபுரத்தைக் கட்டியதை நாம் நன்றியோடு நினைவு கூறலாம்.

Add a Comment