POST: 2014-05-29T03:39:59+05:30

திருவாசகம்,திருவருட்பா,திருமுறைகளை பேராசிரியர் சேட் அவர்களைக்கொண்டு இந்தியில் மொழியாக்கம் நடந்து பல்லாண்டுகள் ஆகின்றன.அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் வழங்கிய பொருட்செல்வம் அப்பணிக்கு ஆறாக ஓடியது.
வட மாநிலங்களின் இந்தி மாநாடுகளில் இந்திப்பல்கலைக்கழகங்கள் ஒரு படியயைக்கூட ஒருவரும் வாங்கவில்லை.

மொழியாக்கம் பாதி நிலைமொழியாளரும் (Source Language)தருமொழியாளரும் (Target Language)இரண்டு பேரும்
கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பாதிப்பாதி தொகையை பங்கிட்டு கொள்ளவேண்டும்,அப்படி ஒரு நிகழ்வு நடப்பதே இல்லை.ஒரு மொழியிலிருந்து மொழிபெயர்த்ததை மற்றொரு மொழியாளர் படித்ததைப் பாராட்டியதை நிறைகுறைகளை சுட்டிக்காட்டுவதை நம்மால் கேள்விப்படவே முடியவில்லை.

தமிழே தெரியாத ஒருவர் குறிஞ்சப்பாட்டை இந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார்.எந்த இந்திப் பேராசிரியராவது படித்து ஏதேனும் கூறியிருக்கிறார்களா என்று நாம் தெரியாமல்
கேட்டதற்காக எனக்கும் அந்த இந்திப்பேராசிரியர்க்கும் நட்பு தொடர்பு நார் அறுந்து விட்டது.

காண்டேகர் மராத்திய மொழியைக்காட்டிலும் தமிழ் மொழியில் தான் என் நூல்கள் விற்பனைச்சிகரத்தை எட்டியது என்றார்.
இது தான் மொழிபெயர்ப்புக்கு கிடைக்க வேண்டிய சான்றுகள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *