அங்கும் அப்படித்தான்
குசராத் அறிஞர் கேசுபாய் தேசாய் என்ற அறிஞரின் நேர்காணலின் கருத்துரை:
எங்கள் இலக்கியங்கள் மாநில பண்பாட்டைக்காப்பதில் தோல்வியடைந்து விட்டன.கல்வி கற்கும் வழிமுறைகளைத்தான் எங்கும் காண முடிகிறது.தொழில் நெறித்துறையில் படிப்பதற்கு இடம் பெறாதவர்களே,மதிப்பெண் குறைந்தவர்களே மொழித்துறைக்கு வருகின்றனர். இளைஞர்கள் தொழில் நெறிகளிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.செல்வத்தை நோக்கி ஓடுகின்றனர்.இலக்கியங்களைப்படிப்பது கடந்த கால செயல் என்று இக்கால இளைஞர்கள் கருதுகின்றனர்.வாழ்க்கையில் எப்படியாவது எங்காவது பணிபுரிய ஏங்குகின்றனர்.ஆனால் பணி கிடைப்பது அரிது.ஆங்கில மொழியை இணையான மொழியாக ஏற்று கடந்த பல ஆண்டுகளாக மாநில மொழிகளை புறக்கணித்து வருகின்றனர்.இப்படிப்பட்ட சிக்கலான மொழிகளே அழிந்து விடுமோ என்ற கூட்டத்தில் உள்ளோம் போல நாம்
இருக்கிறோம்,வணிகத்துறையில் தோயந்தவர்களாக உலக முழுதும் பரந்து வாழ்கிறோம் நம் பண்பாட்டை காக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

Add a Comment