POST: 2014-05-27T22:24:25+05:30

உலகமெல்லாம் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து நலங்குலையாமல் வாழத்தலைப்படுகிறார்கள்.கடல் கடந்து சென்ற நாடுகளில் கோயில்களைக்கட்டியும்,புரோகிதர்களை வரவழைத்து வாழும் நாட்டில் ஊதியம் பெறுவதோடு புளியம்பழ ஓடு போல ஒற்றுப்பற்றின்றி வாழுகிறார்கள்.

திருமதி வத்சலா விஜயகுமார் புலம் பெயராமலேயே கதே ஆய்வு நிறுவனத்தில் தொடர்ந்து பயின்று பாரதியார் பாடல்களின் சில
பறல்களை செருமானிய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.கைதட்டி பாரதியார் மொழியில் தோள் தட்டி தமிழிச்சியின் வெற்றியைக்கண்டு ஆர்ப்பரிக்கலாம்.

புது தில்லியிலுள்ள கோயல் பதிப்பகம் எண்பது பக்க அளவில் எழிலுற 23.5.2014 வெளியிட்டுள்ளனர்.வள்ளல் நல்லியார்,குளோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நிதியுதவி செய்திருக்கிறார்கள்.

செருமானிய கதே நிறுவன இயக்குநர் செருமன் மொழியிலேயே மனதில் உறுதி வேண்டும் பாடலை எடுத்துக் கூறி அளவோடு பொலிவோடு வெளியீட்டு விழா நிறைவடைந்தது.திருமதி வத்சலாவின் முயற்சியை வாழ்த்தி வரவேற்கலாம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *