அருவி விளங்கும் குற்றாலத்தில்,ஆடிக்களிக்க வந்த எனக்கு இத்தென்காசித் திருவள்ளுவர் கழகம்,இருக்க இடமும்,சுவைக்க உண்டியும் தந்து மகிழ்வித்ததோடு அதுபுரியும் அருந்தமிழ்ப்பணியில் என்னையும் ஆட்படுத்திற்று.தமிழுணர்வும், குறளறமும் ததும்ப நிற்கும் தமிழன்பர்கள் குழீமிய இம்மன்றம் நெடிது வாழ்க,மறைமலையும்,பசுமலையும் போன்ற தமிழ்மலைகளும் பங்கேற்ற மாண்புடையது இக்கழகம். இதன் பணிநலம் நம் நாட்டிற்குப் பெருநலம் பயப்பதாய்ப் பிறந்குகிறது.இக்கழகம் மாணப் பெரிதாய் வளர்ந்து அதுமேற்கொள்ளும் பணிகள் நாளும் சிறந்து செழிக்குமாக.
ஔவை நடராசன்
2.8.1964 கருத்துரை ஏடு எண்:204

Add a Comment