மாத்தமிழை வளர்ப்போம்! மாவரைத்து நிற்போம்!!
முதலமைச்சர் ஓமந்தூரார் சிற்றூர் மூலைகளிலும் கேட்பாரற்று கிடக்கும் ஓலைச்சுவடிகளை அச்சடிக்க 20 முதல் 30 இலட்சம் ரூபாய் செலவில் வெளியட திட்டம் தீட்டியிருப்பது போற்றுதற்குரியது என்று செந்தமிழ்ச்செல்வி இதழில் (1.12.1945)இடம் பெற்ற செய்தியாகும்.
இந்தக்கணக்கில் சென்றால் 69 ஆண்டுகளில் வளரும் இயல்புக்கணக்கை கணக்கிட்டால் இன்று அது எவ்வளவு கோடியாகும்? ஆனால் இன்னும் ஓலைச்சுவடிகளை ஓயாமல்
தேடிக்கொண்டிருக்கிறோம்,சிந்தனையாளர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
பேராசிரியர் பசுபதியார் சொல்லும் கணக்கை என் உறவேட்டு(Facebook)28.2.2014,பக்கத்தில் பதிவானதை படிக்கவும்:
தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில்16,480 முகவரிகளில்5,84,134 ஓலைச்சுவடிக்கட்டுகள் உள்ளன என்று 2007-2008 ஆண்டுகளில் நடத்திய களப்பணிக் கணக்கொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது,அவற்றில் 35% முதல் 40% விழுக்காடு நூல்கள் அச்சில் வெளிவராதவைகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ம வே பசுபதி தினமணியில் கட்டுரையில்(19.2.2014) குறித்துள்ளார்.

Add a Comment