POST: 2014-05-12T08:22:02+05:30

“திருவள்ளுவர் பல இடங்களில் வடநூல் மரபை மறுப்பதைப் போலவே குறிப்பாக, மனுதர்மத்தின் வருணத் தர்மத்தை மறுக்கவே பிறப்பொக்கும் என்றார்; அதன் நீட்சியே சிறப்பொவ்வா என்பதும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

மக்கள் அனைவருக்கும் பிறப்புச் சமமானதே ஆகும். எல்லாத் தொழில்களும் மதிப்புடையனவேயாகும். ஆதலின், தொழில் வேறுபாட்டைக் கொண்டு சிறப்பளிப்பது பொருந்தாதென்று பொருள்கொள்வதே ஏற்றது; சிறந்தது. பிறப்பு எல்லாருக்கும் ஒத்திருப்பதைப் போன்று, மக்களைத் தொழில்களால் பெருமை- சிறுமைக்கு உட்படுத்தாமல், அனைத்துத் தொழில்களையும் ஒத்ததாகக் கருத வேண்டும் என்பதே அவர் நோக்கு அதாவது பிறப்பிலும் ஏற்றத்தாழ்வு இல்லை; அதே போன்று தொழில்களிலும் ஏற்றத் தாழ்வு இல்லை என்கிறார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *