மலேசியா திருநாடு பொதுவுடைமை போக்கை கண்டு மருண்ட போது தொழிலாளர்களின் தலைவர்,தோழர் டேவிட் அஞ்சாத அடலேறாக எதிர்க்கட்சியில் இருந்தவர்-நின்றவர்-வென்றவர்.
தமிழகத்திற்கு அடிக்கடி வருவார்,தமிழர்களுக்கு உலக வங்கி அமைய வேண்டும் என்று கனவு கண்டார்.உலகத்தமிழர் மாமன்றம் என்றே ஒரு அமைப்பினை உருவாக்கியிருந்தார்.
கம்பர் கவிநயச்செம்மல் அறிஞர் நல்லபெருமாள் அவர்களின் சென்னை இல்லத்தில் தோழர் டேவிட் அவர்களை சந்தித்துள்ளேன்.சிவந்த தோற்றமும்,பருத்த உடலும் கொண்ட அவர் மலேசியா வாழ் இந்திய-தமிழர் தொழிலாளர்களுக்கு பல்திறன் பயற்சிப்பள்ளி ஒன்றை நிறுவியிருந்தார்.
தோழமையுணர்வை அனைவரிடமும் காட்டி வாழ்ந்த தொண்டர் திலகம் திரு டேவிட்டை நாம் நினைப்பது நெகிழ்ச்சியாக உள்ளது.

Add a Comment