கல்வி வேண்டும்
கேள்வி வேண்டும்.
அறிவு வேண்டும்.
குற்றம் கடிந்த வாழ்வு வேண்டும்.
பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும்.
சிற்றினம் சேராமல் வாழ வேண்டும்.
தெரிந்து (ஆராய்ந்து) செய்யும் இயல்பு வேண்டும்.
வலியும் காலமும் இடமும் அறிந்து வினை செய்யும் திறம் வேண்டும்.
தெரிந்து தெளியும் ஆற்றல் வேண்டும்.
தெரிந்து வினையை ஆளும் வன்மை வேண்டும்.
சுற்றம் தழுவவேண்டும்.
பொச்சாப்பு (சோர்வு) இல்லாமல் கடமைகளைச் செய்ய வேண்டும். செங்கோன்மை (நேர்மை) வேண்டும்.
கொடுங்கோன்மையை வெறுக்க வேண்டும்.
வெருவந்த (பிறர் அஞ்சி நடுங்கும் செயல்கள்) செய்யாமை வேண்டும்.
ஊக்கம் வேண்டும்.
சோம்பலை ஒழிக்க வேண்டும்.
முயற்சி வேண்டும்
இடுக்கணை (துன்பத்தைப்) பொருட்படுத்தாத உறுதி வேண்டும். இவைகளே அரசியலில் ஆட்சித்தலைவர்க்குத் திருவள்ளுவர் கூறும் 19 இயல்புகள்.

Add a Comment