POST: 2014-04-09T08:24:58+05:30

திருவள்ளுவர் மக்களின் நல்வாழ்வைக் குறிக்கோளாகக் கொண்டு எழுதியவர்.

தமிழ்நாட்டு மூவேந்தர்களின் மரபுகளையோ அவர்களுக்குரிய கொடி பூ முதலியவற்றையோ எங்கும் கூறவில்லை.
குறுநில மன்னர்களின் மரபுகளையும் கூறவில்லை.
அரசர்களின் பிறந்த நாள் விழாவையும் பிற விழாக்களையும் கூறவில்லை.
முடி சூட்டும் சிறப்பையும் கூறவில்லை.
இறந்தபின் அடக்கம் செய்யும் வழக்கத்தையும் அதன் பிறகு உடனே மகனோ மற்றொருவனோ கட்டிலேறும் வாழ்வையும் அவர் கூறவில்லை.
வேந்தனுக்கு வேண்டிய வீரத்தையும் அறமுறையையும் கூறினாரே அல்லாமல், அவன் கையில் ஏந்திய வாளையும் செங்கோலையும் புகழ்ந்து வருணிக்கவில்லை.
அரசனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாடு எவ்வாறு விளங்க வேண்டும் என்று கூறினாரே அல்லாமல், அரசன் வாழும் அரண்மனை எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்று கூறவில்லை. திருவள்ளுவர் வகுத்த அரசியல் கருத்துகள் எந்த ஆட்சிமுறைக்கும் அடிப்படையாக அனுப்ப வேண்டிய கருத்துகளாக விளங்குகின்றன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *