POST: 2014-04-06T08:52:42+05:30

ஆய்வும்! தேய்வும்!!

ஆராய்ச்சியென்பது ஒரு பழஞ்சொல்.திறனாய்ந்து தெளிதல் என்று விரிவாக குறிப்பிடுவார்கள்.

கீரையை ஆய்வது என்ற பழஞ்சொல் தளிர்களையும்,துளிர்களையும்,வேர்களையும் வேறுபடுத்துவதாகும்.முதலில் தண்ணீரில் தோய்த்து பிறகு கீரைகளை ஆராய்வது மகளிரின் செயல்முறையாகும்.அந்த வகையில் தான் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பு ஆய்வுக்குரியதாக அமைத்து மரஞ்செடி கொடிகளை,மலை,ஆறு குளங்களை குறிப்பிட்டு அறிஞர் மு வ எழுதினார்.

இயற்கையைப்பற்றி உலகம் என்ன எண்ணுகிறது.அயலவர்கள் இயற்கையை எப்படி நோக்கினார்கள் என்ற சிந்தனைப்புதையலாக தவத்திரு தனிநாயக அடிகளார் எழுதினார்.

குடிபுகுவதற்கு முன்னால் வீட்டை பெருக்கி துடைப்பது போல,எந்தத்தெளிவும் இல்லாதவர்கள் சொல்லடைவினை மேலோட்டமாக தொகுத்தார்கள்.அதனையும் ஆய்வு என்று அழைத்தார்கள்.தனிநாயக அடிகள் தவிர எஞ்சியவர்கள் ஆய்வின் ஓரத்தில் கூட நிற்க தகுதியை இழந்தார்கள்.எனவே ஓவச்செய்தி ஆய்வு நூலாகும்.

அண்மையில் பேசிய பேராசிரியர் அரவிந்தன்,அறிவியல் ஆய்வுக்கு ஒரு கோடி ரூபாயும் இலக்கிய ஆய்வுக்கு ஒரு லட்சம் ரூபாய தருவதற்கு தயங்குவதாகவும் வருந்தி குறிப்பிட்டார்.

நிறுவனங்கள்,ஆய்வு மன்றங்கள்,நடுவண்
நிறுவனங்கள்,கல்லூரித்துறைகள்,பல்கலைகழகத்துறைகள் அனைத்திலும் ஆய்வுகள் நடைபெறுகின்றன.

எல்லையும்,வரையறையும் வகுக்க தெரியாமல் பொய் நூல் புற்றிசீல் போல ஆய்வுப்பெயரில் பொலபொலவென உதிர்கின்றன என்று அழுபவர்களின் குரல் அதிகார அமைப்பின் காதில் விழுவதில்லை அவர்கள் துறையறிவு பெற்றவர்களும் இல்லை என்று 3.4.2014 இந்து நாளிதழில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *