தமிழாண்டுகள் அறுபது என்றும் இயல்பாகவே ஏப்ரல் 14 ஆம் நாள் புத்தாண்டுப்பிறப்பு தமிழில் வரும்.
ஏறத்தாழ இந்தக்கால வரம்புக்குள்ளேயே கன்னட ஆண்டுப்பிறப்பும்,தெலுங்கு ஆண்டுப்பிறப்பும் அமையும்.எதிர்வரும் தமிழாண்டின் பெயர் ஜெய என்பதாகும்.உகாதி என்ற சொல்லுக்குப்பொருளை தெலுங்கு அறிந்தவர்கள் குறிப்பிட்டுக்காட்டலாம்.மலையாள ஆண்டுப்பிறப்பினை விஷு என்பார்கள்.
12 திங்களும் இகரம் அல்லது ஔ காரத்தில் முடியும் என்பது தொல்காப்பியம்.வைகாசி,மாசி,
புரட்டாசி,ஐப்பசி,பங்குனி இந்த மாதங்களுக்கு பொருள் தெரியவில்லை.கிழமைகளும் அவ்வாறே!செவ்வாய்க்கிழமையை நாம் போற்றுவதில்லை என்றாலும் தெலுங்கர்கள் அதை மங்கல வாரம் என்பார்கள்.வாரம் நமக்கு 7 நாள்,தெலுங்கில் ஒவ்வொரு நாளும் வாரமாகும்.
தெலுங்கு மொழி இசையோடு பொருந்திய இனிமையான மொழியாகும்.தமிழுக்கு அமுதென்று பேர் என்பது போல தெலுங்குக்குத் தேன் என்று பேர்.பாடுவதற்குரிய சுந்தரத்தெலுங்கு என்று பாரதியாரும் களி தெலுங்கு என்று மனோன்மணியம் ஆசிரியர் குறிப்பிடுவார்.Italian of the East,கீழை நாட்டு இத்தாலிய மொழி என்று தெலுங்கை குறிப்பிடுவார்கள்.
தெலுங்கர்கள் ஆர்வமுடையவர்கள்,
காரம் விரும்புபவர்கள்,பஞ்சாபியர் சாயலோடு உயரமுடையவர்கள்.அந்த நாளில் தெலுங்கு நடிகைகளே
அழகியர்களாக கருதப்பட்டனர்.தெலுங்கு வேந்தரை நினைவுக்கூறும் வகையில் ராஜமன்னார்,மன்னார்குடி,லால்குடி என்ற பெயர்கள் வந்கன.குடி என்றால் தெலுங்கில் கோயில் என்று பொருள்

Add a Comment