ஒராண்டை தொட முடியவில்லையே!
சீக்கியர் வரலாறும், சமயமும் பற்றி பல தொகுதிகள் எழுதியவர்.சீக்கிய சிந்தனைச்சுரங்கம்,சீக்கிய இனத்தின் சிங்கம்,எழுத்தெண்ணி படித்த ஆங்கிலத்தை இலக்கிய வெள்ளமாக பொழிந்தவர்.
The Illustrated Weekly of India இதழின் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினாலும்,ஆறாண்டு வளர்ச்சியைக்காட்டியவர்.எண்ணற்ற துறவிகளை கண்டு பேசி,பழகி இவர்கள் எல்லாம் Godmen அல்ல Madmen என்று எழுதியவர்.எதைப்பற்றி எழுதினாலும் அந்தப்பொருளின் வேர் வரை நுழைந்துப் பார்த்து தெளிந்த பிறகு தான் எழுதுவார்.
காலம் எவ்வளவு காலம் தான் காத்திருக்கும்;கனிந்த பழுத்த இலை உதிர்ந்து விட்டது.கண்ணதாசனும்,கம்பதாசனும் கோப்பையில் குடியிருக்கலாம் என்பதற்கு இவர் வடநாட்டு வழிகாட்டி!
பழகிய பெண்களோடு பரிவோடு எழுதியவர்.விரசத்தைக்கூட அதன் விளிம்பு உடையாமல் எழுதியவர்.இவர் கோபத்தில் கூட வனவாசம் எழுதாதவர்.நெருக்கடி நிலையில் நெஞ்சுயுர்த்தி நின்ற அன்னை இந்திராவுக்கு ஆறுதல் சொன்னவர்.
சர்தார் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்,ஆனால்
நினைவில் வாழும் திரு குஷ்வந்த் சிங்கின் குலச்சுடர்கள் ஒளி வீசுகின்றன.

Add a Comment