தமிழ்க்கடல் ஔவை நடராசன் பேசிய தலைமை உரையிலிருந்து-சென்னை கம்பன் விழாவில்-அமுதசுரபி இதழில் பிப்ரவரி 2014 வெளியிடப்பட்டது:
கம்பன் கவியே கவி!
கையில் கவிதையும் அருகே நீயும் இருந்தால் எந்த இடமும் சொர்க்கம்தான்! என்று எழுதினான்
உமர்கயாம்.அதை மொழிபெயர்த்தவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை.
வெய்யிற்கேற்ற நிழலுண்டு,வீசும் தென்றல் காற்றுண்டு,கையில் கம்பன் கவியுண்டு! எனத் தமிழாக்கினார் அவர்.
கவிதை என்பது உமர்கயாம் பொதுப்படையாகச் சொன்னதை கம்பன் கவி எனக் கவிமணி தமிழ்ப்படுத்த என்ன காரணம்?
கவிதை என்றால் தமிழில் கம்பன் கவிதை தான் கவிதை.மற்ற கவிதை எதுவும் அத்தனை சிறப்புடையதல்ல என்பதே காரணம்!

Add a Comment